சைரஸ் மிஸ்த்ரி உயிரிழந்தது எப்படி? பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மும்பை வோர்லி பகுதியில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. ரத்தன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்நதவர் சைரஸ் மிஸ்த்ரி.…

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று மும்பை வோர்லி பகுதியில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

ரத்தன் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்நதவர் சைரஸ் மிஸ்த்ரி. 2012ம் ஆண்டு ரத்தன் டாடா பதவி விலகிய பிறகு, டாடா குழுமத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 2016ம் ஆண்டு டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில், சைரஸ் மிஸ்த்ரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சூர்யா ஆற்றின் மேல்  மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் இருந்த டிவைடரில் கார் எதிர்பாராதவிதமாக திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறுதிச்சடங்கில் அனில் அம்பானி தனது மகன்களுடன் வொர்லி மயானத்திற்கு வந்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோரும் வந்தனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் சைரஸ் மிஸ்த்ரியின் உடலில் பல எலும்பு முறிவுகளும், முக்கியமான உறுப்புகளில் காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
சைரஸ் மிஸ்த்ரிக்கு தலை, மார்பு, தொடை, கழுத்து ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அவருடைய ரத்த மாதிரிகள் மேலும் ஆய்வுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.