அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்கள் இறுதி சடங்குகளை நடத்து பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் உலக வல்லரசு என அழைக்கப்படும் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் இந்த பணவீக்கம் 8.6% ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இறுதி சடங்கு நடத்தும் செலவுகள் 2.7% ஆக உயர்ந்துள்ளது. 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகமாகும். இதன் காரணமாக மக்கள் இறுதி சடங்குகளை நடத்துவதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
இது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இறுதி சடங்கு நடத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தங்களால் இயன்றதை செய்வோம் என்றும் ஆனால் இந்த நிலை நிச்சயம் மாறியே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு செல்லவும், இதற்கான எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டே இந்த விலை அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
2022 முதலாம் காலாண்டு நிலவரப்படி பணவீக்கத்தால் அதிகள அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் துருக்கி முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் பணவீக்கம் 54.8% ஆக உள்ளது. துருக்கிக்கு அடுத்து இஸ்ரேல் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்த அளவில் மே மாத நிலவரப்படி பணவீக்கம் 15.88% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








