உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி…

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 20 மேற்பட்ட…

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.

ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 20 மேற்பட்ட இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிககான தகுதி சுற்றில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் வீசி, முதல் வீரராக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடந்த முறை ஓரகனில் இதே தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் நடப்பாண்டு இறுதிப் போட்டிக்கு இந்த தொடரின் சிறந்த இலக்கை எட்டி முன்னேறி உள்ளார் சோப்ரா.

நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று இந்த முறை தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.