இந்தியாவின் உற்பத்தித் துறையில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மார்ச் மாதத்தில் 59.1 PMI ஆக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வலுவான தேவை காரணமாக புதிய ஆர்டர்களின் அதிகரிப்பு, இந்தியாவின் உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு, மார்ச் மாதத்தில் தான் உற்பத்தியும், புதிய ஆர்டர்களும் வலுவான உயர்வை பதிவு செய்துள்ளன.
இதையும் படியுங்கள் : திருவண்ணாமலையில் நடந்தே சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத உற்பத்தித் நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதேபோல இந்த மாதமும் ஆய்வு நடத்தி அறிக்கையை எஸ் அண்ட் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“உற்பத்தித் துறையின் தயாரிப்பு வளர்ச்சி அடிப்படையிலான எஸ் அண்ட் பி குளோபல் அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் 59.10 PMI ஆக குறியீடு அதிகரித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பின், 16 ஆண்டுகளில் இந்த புள்ளிகளின் எண்ணிக்கை தான் அதிகபட்சமாகும்.
50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். மார்ச் மாதத்துடன் சேர்த்து, தொடர்ந்து 33 மாதங்களாக இக்குறியீடு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது”
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





