முக்கியச் செய்திகள் இந்தியா

8.4% ஜிடிபி; “பொருளாதாரம் இன்னமும் தடுமாறிக்கொண்டிருக்கிறது“ – ப.சி

இந்தியாவில் 2021-2022ம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.4% ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021 ஆண்டுகளின் இரண்டாம் காலாண்டில் ரூ.32.97 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2021-2022ம் ஆண்டுகளின் இரண்டாவது காலாண்டில் ரூ.35.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8.4% சதவிகித வளர்ச்சியாகும்.

கடந்த ஆண்டுகளில் 3% ஆக இருந்த வேளாண் துறை உற்பத்தியானது 2021-22 ஆண்டுகளில் 4% ஆக அதிகரித்துள்ளது என்றும், 1.5% ஆக இருந்த உற்பத்தி துறை 5.5% ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், அதிகரித்த வணிக நடவடிக்கைகளாலும் எதிர்பார்த்ததைவிட ஜிடிபி வளர்ச்சி கடந்த காலாண்டில் உயர்ந்துள்ளது.

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புகள் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்துள்ளதாக பொருளாதார அறிஞர் கவுரா சென் குப்தா தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இது ‘V’ வடிவ வளர்ச்சி அல்ல. பொருளாதாரம் இன்னும் தடுமாறிக்கொண்டிருகிறது இருக்கிறது. அதை மீட்டெடுக்க இன்னும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.” எனக் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கூடுதல் கட்டணம்; ஆம்னிப் பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை, பேருந்துகளில் சோதனை

Halley Karthik

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Gayathri Venkatesan

பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

Halley Karthik