அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம மரணம்!

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் முகமது அப்துல் அர்ஃபத் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத்.  25 வயதான முகமது…

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் முகமது அப்துல் அர்ஃபத் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவின் தலைநகரான ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்ஃபத்.  25 வயதான முகமது அப்துல் அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.  இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாயமானார்.

இதையடுத்து,  இச்சம்பவம் அந்த நாட்டு காவல்துறையினருக்கும்,  அங்குள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து,  அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.  இந்த நிலையில்,  மாயமான முகமது அப்துல் அர்ஃபத்தின் சடலத்தை ஓஹியோவில் உள்ள கிளெவ்லேண்டில் இன்று காலை மீட்டுள்ளனர்.  இதனை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம்,  “தேடுதல் பணி நடந்து கொண்டிருந்த நிலை முகமது அப்துல் அர்ஃபத்,  ஓஹியோவின் கிளீவ்லேண்டில் இறந்து கிடந்ததை அறிந்து வேதனையடைந்தோம்.  முகமது அர்பாத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்தது.

https://twitter.com/IndiainNewYork/status/1777532293608779886?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1777532293608779886%7Ctwgr%5E63befc176e8f5292bcc759e25227c010be1a6fc9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fworld-news%2Fus-news%2Fanother-missing-indian-student-found-dead-in-ohio-us-11th-such-case-this-year-101712635172875.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.