முக்கியச் செய்திகள் விளையாட்டு

மும்பை டெஸ்ட்.. 6 விக்கெட்டுகளை அள்ளினார் அஜாஸ் பட்டேல்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல், ஆறு விக்கெட்டுகளை  இதுவரை அள்ளியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி, இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 44 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த புஜாரா , அஜாஸ் பந்துவீச்சில் ரன் எடுக்காமல் வெளியேறினார்.அதை தொடர்ந்து வந்த கேப்டன் கோலியையும் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆக்கினார் அஜாஸ். முதல் நாள் போட்டியின் கடைசி செசனில் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் தனது 4 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 221 எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும் சாஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

இன்று காலை போட்டித் தொடங்கியதும் சாஹா (27 ரன்கள்) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார் அஜாஸ். பின்னர் அக்சர் படேல் களமிறங்கியுள்ளார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் நங்கூரமாக நின்று ஆடி வருகிறார்.

டிரிங்ஸ் இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 133 ரன்களுடன் அக்சர் படேல் 22 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.
நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். அந்த அணியில் வேறு யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. அஜாஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Gayathri Venkatesan

அண்டார்டிகாவில் உச்சத்தை தொட்ட வெப்பநிலை!

Vandhana

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

Halley Karthik