முக்கியச் செய்திகள் விளையாட்டு

கடைசி டி-20: ராகுல், அஸ்வினுக்கு ரெஸ்ட், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரவில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருப்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கும் ரவிசந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷனும் சாஹலும் களமிறங்கியுள்ளனர்.
நியூசிலாந்து அணியில் டிம் சவுதிக்கு ஓய்வளிக்கப்பட்டு, பெர்குசான் இணைந்துள்ளார்.

இந்த மைதானத்தில் இதுவரை ஏழு சர்வதேசடி-20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணி விவரம்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மன், பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், சோதி, மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட், பெர்குசன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தீபாவளி மறுநாள் விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

G SaravanaKumar

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் 2வது ஒருநாள் போட்டி

G SaravanaKumar

காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் ஒத்திவைப்பு!