ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு யார் பயிற்சியாளர் தெரியுமா?

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ஆகஸ்ட் 18ம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் மற்றும்…

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் ஆட்டம் ஆகஸ்ட் 18ம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் மற்றும் மூன்றாவது ஒரு நாள் ஆட்டம் முறையே ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

லோகேஷ் ராகுல் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித், கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

அவர் கூறுகையில், ‘ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை லட்சுமண் கவனிப்பார். ஆசிய கோப்பைப் போட்டிக்காக வருகிற 23-ந்தேதி அணியினருடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். இரண்டு தொடருக்கு இடையே குறைந்த கால இடைவெளி மட்டுமே உள்ளதால் ஜிம்பாப்வே தொடருக்கு பயிற்சியாளராக லட்சுமணை நியமித்துள்ளோம்’ என்றார் ஜெய் ஷா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.