கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா 4 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக எரிபொருளை வழங்கியுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. தூதரகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 12 கப்பல்கள் மூலம் இதுவரை 4 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிமான எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, இலங்கைக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையின் கோரிக்கையை அடுத்து, இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள உரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியை சந்தித்து, இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலின்டா மொரகோடா நன்றி தெரிவித்தார். இலங்கையில் பயிர் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் இந்தியா இந்த உதவியை அளிக்க முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை கடனாக வழங்க இந்தியா அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்பின் கீழ் இந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.