நாளை மேட்டூர் அணைக்கு சுமார் 2.12 லட்சம் கன அடி நீர் நீர் வரத்து வர உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேஆர்எஸ் & கபினி அணைகளில் இருந்து வெளியேற்றம் நீரின் அளவு அதிகரிப்பு மற்றும் கர்நாடகா மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒருங்கிணைந்த நீர்வரத்து (சுமார் 2.12 லட்சம் கனஅடி) நாளை காலை (31.08.2022) மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, காவிரி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரவு 7.30 மணி அளவில் இருந்து மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியில் இருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும், மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
இன்று இரவு 9.30 மணி அளவில் இருந்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என மேட்டூர் அணை உதவி செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.