முக்கியச் செய்திகள் தமிழகம்

கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கீதா ஜீவன் தகவல்

அமைச்சர் கீதா ஜீவன்

சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் மாநாட்டில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கொரோனாவுக்கு பிறகு கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

 

சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் மாநாடு நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையுடன், கண் பரிசோதனையும் மேற்கொள்வது பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்துவது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். கொரோனாவுக்குப் பின் கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

 

பின்னர் பேசிய அகர்வால் கண் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், சத்தான காய்கறிகள், கீரைகள் எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், உரிய கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ளுதல் மூலம் கண் குறைபாடைத் தவிர்க்கலாம் என்றார்.

 

கண் தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்ற அவர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அகர்வால் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நெல் கொள்முதல் முறைகேடு; 56 பேர் மீது நடவடிக்கை

Saravana Kumar

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறிய ரோஜர் பெடரர்

Vandhana

அம்பேத்கரை நினைவு கூர்ந்த அரசியல் தலைவர்கள்!

Gayathri Venkatesan