அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

தேனியில் அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வரும் அன்புச்செழியன் என்பவருக்கு சொந்தமான…

தேனியில் அரசு மருத்துவத்துறை அதிகாரிக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களில், வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடியில் மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வரும் அன்புச்செழியன் என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

போடியில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான அருண் மருத்துவமனை, போடி பேருந்து நிலையம் அருகே இயங்கி வருகிறது. தேனி மாவட்ட சுகாதாரத்துறை குடும்ப நலன் துணை இயக்குனராக பணியாற்றி வரும் மருத்துவர் அன்புச்செழியனுக்கு சொந்தமான  இந்த மருத்துவமனையில், மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையாளர் மைக்கேல் ஜெரால்ட் தலைமையில் 8 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர் அன்புச்செல்வனின் மனைவி அமுதா அன்புச் செழியனிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீட்டிலும், வருமான வரி சோதனையானது நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.