நியூஸ் 7 தமிழ் செய்தியால் 15 ஆண்டுக்குப் பிறகு சாலை அமைக்கும் பணி! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

பெரியகுளம் கீழ் வடகரை ஊராட்சியில் 15 ஆண்டுகளாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமான சாலை குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக சாலை அமைக்கும் பணி துவங்கியது. தேனி மாவட்டம், பெரியகுளம்…

பெரியகுளம் கீழ் வடகரை ஊராட்சியில் 15 ஆண்டுகளாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமான சாலை குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக சாலை அமைக்கும் பணி துவங்கியது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ வடகரை ஊராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதி சாலை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சேதமடைந்து குண்டு, குழியுமாக பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூராக இருந்தது. அந்தப்பகுதி மக்கள் சாலை அமைக்க கோரி 15 வருடங்களாக போராடி வந்த நிலையில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக தற்போது கீழ வடகரை ஊராட்சி ஒன்றிய பிரதான சாலை பணியினை தமிழ்நாடு அரசு 95 லட்சம் மதிப்பீல் தனியார் ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் உரிமம் வழங்கப்பட்டு சாலை பணிகள் துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

—-அனகா காளமேகன்

PRK PERIYAKULAM NEWS ROAD WORK START VISUVAL IN FTP 01

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.