ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் – மாவட்ட கல்வி அலுவலர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் மிக கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் மட்டும் 440 மி.மீ.…

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுதல் மிக கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் ராமேசுவரத்தில் மட்டும் 440 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், இன்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், சூழலுக்கு ஏற்ப இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.