25 நாட்களில் ரூ.150கோடி வசூலைக் கடந்த “ஆடுஜீவிதம்”!

ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி 25நாட்கள் ஆன நிலையில் ரூ.150கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் .  இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி…

ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி 25நாட்கள் ஆன நிலையில் ரூ.150கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ஆடுஜீவிதம் திரைப்படம் .  இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும்.  இந்த நாவலை எழுத்தாளர் பென்யாமின் எழுதியுள்ளார்.  மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஆடு ஜீவிதம் திரைப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார்.  கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். 2010-ம் ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருதினை இந்நாவல் பெற்றது குறிப்பிடத்தக்கது.  நஜீப் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார்.  இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் சுமார் 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  மார்ச் 28-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.

இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியான 9நாட்களிலேயே 100கோடி ரூபாய் வசூலை கடந்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் வெளியாகி 25நாட்கள் ஆன ரூ.150கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.