முக்கியச் செய்திகள் உலகம்

பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் 6 நாள் கெடு

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான தேதியை இன்னும் 6 நாட்களில் அரசு அறிவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கெடு விதித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த இம்ரான் கான், கடந்த மாதம் பதவி இழந்தார். எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை பதவி இழக்கச் செய்தன. இதையடுத்து புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்க சதி காரணமாகவே தனது அரசு பதவி இழந்தது என்றும், தற்போது பாகிஸ்தானில் ஆட்சியில் இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட அரசு என்றும் கடுமையாக விமர்சித்து வரும் இம்ரான் கான், பொதுத் தேர்தல் நடத்த வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிடும் நோக்கில் தனது ஆதரவாளர்களுடன் அவர் வாகன பேரணியை மேற்கொண்டார்.

இன்று அதிகாலை அவரது வாகனம் இஸ்லாமாபாத்தை அடைந்தது. அவர் வருவதற்க முன்பாக, நகரின் முக்கிய பகுதியான டி சவுக்கை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டிருந்தனர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது. பேரணியின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை டி சவுக் பகுதியைவிட்டு நகர மாட்டோம் என அறிவித்த இம்ரான் கான், அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானில் உள்ள மாகாண அரசுகள் உடனடியாக கலைக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அடுத்த 6 நாட்களுக்குள் இதற்கான அறிவிப்பை அரசு வெளியிடாவிட்டால், மீண்டும் இஸ்லாமாபாத்திற்கு வருவோம் என கூறியுள்ளார்.

இதனிடையே, 2023 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இம்ரான் கான் நடத்திய பேரணி தோல்வியில் முடிந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்

Halley Karthik

மூன்று பேரும் மறுப்பு: எதிர்க்கட்சிகளின் அடுத்த தேர்வு இவரா?

Web Editor

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது

G SaravanaKumar