“தனுஷ் இயக்கத்தில் நடிக்கவில்லை” – நடிகர் #AshokSelvan!

தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். நடிகர் மட்டுமின்றி பாடகர், இயக்குநர்…

“I'm not acting in Dhanush's direction” - actor #AshokSelvan!

தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இட்லி கடை திரைப்படத்தில் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். நடிகர் மட்டுமின்றி பாடகர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத்தொடர்ந்து “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதில் மலையாள நடிகர்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கோல்டன் ஸ்பாரோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடர்ந்து தனுஷ் இட்லி கடை என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியதாகவும், இதில் அசோக் செல்வன், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் இணைந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது;

தனுஷின் தீவிரமான ரசிகன் நான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். ஆனால் இட்லி கடை திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.