வெறித்தனம்.. வெறித்தனம் – Virat Kholiஐ பார்ப்பதற்காக 7 மணிநேரம் #Bicycle பயணம் செய்த 15 வயது சிறுவன்!

விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக சைக்கிளிலேயே 58 கிமீ பயணித்த, 15 வயது சிறுவனின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில்…

விராட் கோலியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக சைக்கிளிலேயே 58 கிமீ பயணித்த, 15 வயது சிறுவனின் செயல் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனைத்தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி 35 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது. அதன் படி வங்கதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களைச் சேர்த்தது. மொமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் நேற்று கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க, 15 வயது சிறுவன் 58 கிமீ பயணித்து, சைக்கிளில் சென்றது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகேய் என்ற சிறுவன் உன்னாவ் நகரத்திலிருந்து போட்டி நடைபெறும் கான்பூருக்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார். காலை 4 மணிக்கு புறப்பட்ட இவர், 11 மணிக்கு கிரீன் பார்க் ஸ்டேடியத்தை அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 7 மணிநேரம் விராட் கோலியை பார்ப்பதற்காக சைக்கிளை மிதித்து சென்றுள்ளார்.

கிரிக்கெட் உலகில் தோனி, சச்சின், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் என பலரும் தங்கெளுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர். அந்த வகையில் விராட்டின் குட்டி ரசிகர் அவரை பார்ப்பதற்காக 58கிமீ சைக்கிளில் சென்றது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.