மோகன் பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘சன் ஆஃப் இந்தியா’ படம் வெற்றி பெற இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமை திரையுலகில் நடிகர் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமையுடன் வலம் வருபவர் மோகன் பாபு. இவர் நடிப்பில் உருவான “சன் ஆப் இந்தியா” திரைப்படம் வரும் 18ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மோகன் பாபு சிறந்த நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர்கூட. அவரது சன் ஆஃப் இந்தியா படத்தை என் படம் போல் எண்ணிதான் அதில் பணியாற்றினேன். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. 18 ஆம் தேதி வெளியாக உள்ள “சன் ஆஃப் இந்தியா” படம் மிகப்பெரிய வெற்று பெற வேண்டும். தயாரிப்பாளர்கள் லக்ஷ்மி மஞ்சு மற்றும் விஷ்ணு மஞ்சு இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







