இளையராவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள புதிய படம் காம்ப்ளக்ஸ்

உருவ கேலியும் ஒருவகை வன்முறை தான் – காம்ப்ளக்ஸ் திரைப்படம் நாச்சியார் மற்றும் வர்மா திரைப்படங்களில் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் தற்போது காம்ப்ளக்ஸ் என்ற புதிய திரைப்படத்தை இயக்கி உள்ளார்.…

உருவ கேலியும் ஒருவகை வன்முறை தான் – காம்ப்ளக்ஸ் திரைப்படம்

நாச்சியார் மற்றும் வர்மா திரைப்படங்களில் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் தற்போது காம்ப்ளக்ஸ் என்ற புதிய திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் நாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்துள்ளார், நாயகியாக இவானா நடித்துள்ளார். இவர்களுடன் எம் எஸ் பாஸ்கர், ஆரத்யா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். உருவ கேலியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் உருவ கேலி செய்வது தவறு, ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு என்பது சுற்றிக்காட்டப்பட்டுள்ளது.

இப்படத்தைப்பற்றி பேசிய இயக்குனர் உருவ கேலி என்பது எல்லா காலகட்டத்திலும் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் வந்துள்ளது. அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசி விட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு உருவ கேலி செய்வது தவறு என்பதை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே நேரத்தில் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை நானும் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன் என்றார்.

இப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார். 80களில் இருந்த இளையராஜா ட்ரெண்டியாக இசையமைத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. படத்தில் உள்ள 4 பாடல்களும் நன்றாக வந்திருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளர். ஞானகரவேல், பாலா சீத்தாராமன் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஒளிப்பதிவு பர்வேஷ், படதொகுப்பு சதீஷ் சூர்யா மற்றும் கலை இயக்குனராக மாய பாண்டியன் பணியாற்றியிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படம் வெளியாக உள்ளது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.