பகாசூரன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக பயம் வரும் – இயக்குநர் மோகன் ஜி

உண்மை சம்பவத்தை வைத்து படம் எடுப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் என்றும்  பகாசூரன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக  பயம் வரும் என்றும் அந்த திரைப்படத்தின் இயக்குநர்  மோகன் ஜி  தெரிவித்துள்ளார்.  Third eye எம்டி விஜய்…

உண்மை சம்பவத்தை வைத்து படம் எடுப்பதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும் என்றும்  பகாசூரன் படத்தை பார்த்தால் கண்டிப்பாக  பயம் வரும் என்றும் அந்த திரைப்படத்தின் இயக்குநர்  மோகன் ஜி  தெரிவித்துள்ளார். 

Third eye எம்டி விஜய் தயாரிப்பில் உருவாக இருக்கும் புரோடக்சன் 2 திரைப்படத்தின் பூஜை விழாவானது சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மோகன் ஜி, சின்னத்திரை நடிகர் புகழ், நடிகர் ஆனந்த் பாபு, வையாபுரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் ஜி,  பகாசுரன் டிரெய்லர்க்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. விமர்சனம் செய்தவர்கள் கூட இந்த படத்தின் டிரைலரை பார்த்து வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது. சேலத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை என்னிடம் இந்த கதையை சொன்னார். அதன் அடிப்படையில் நான் அதை எல்லாம் ஆய்வு செய்தேன். இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் என்றார்.

மேலும், பல சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் எழுதி உள்ளேன். மிகவும் சென்சிடிவ்வான கதை இது. பல கல்லூரிகளில் இப்படி நடந்துள்ளது. தனிப்பட்ட கல்லூரி என்று சொல்ல முடியாது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கும் போது அதில் உண்மை இருக்க வேண்டும். அதனால் தான் மக்கள் இவ்வளவு வரவேற்பு அளிக்கின்றனர். உண்மை சம்பவத்தை வைத்து படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும்.

இதற்கு முன்பு ஆர் கே செல்வமணி, ஷங்கர் உள்ளிட்டவர்கள் படம் எடுத்துள்ளனர். தற்போது எனக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்துள்ளது. கதைக்கு தான் நான் ஹீரோ தேடுவேன். ஹோரோவுக்காக நான் கதை பண்ணுவது கிடையாது என கூறினார்.

அத்துடன்,  பாலியல் துன்புறுத்தல் எங்கு நடந்தாலும் அது தவறு தான். மக்கள் அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று தெரியும். எல்லா கட்சிகளும் இது மாதிரி நடக்கிறது. பெண்கள் அதை தைரியமாகச் சொல்ல வேண்டும் என்று தான் படம் எடுக்கிறோம். கண்டிப்பாக இந்த படம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வாகவும், பயத்தையும் ஏற்படுத்தும். அஜித் சார் சொன்ன மாதிரி நல்ல படத்திற்கு அதுவே தான் புரொமோஷன் அதை மனதில் வைத்து தான் வேலை செய்து வருகிறேன். ஆளுமா டோலுமா மாதிரி சில்லா சில்லா பாடல் இருக்கும் என நினைக்கிறேன் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.