‘தி ரோட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பான் இந்திய திரைப்படமாக அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் நெடுஞ்சாலையில் நிகழும் கிரைம் திரில்லர் கதையாக ‘தி ரோட்’ உருவாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.ஸ். இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் வருகிற செப்.21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.