ஐசிசி தரவரிசை : சுப்மன் கில் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான்…

ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஷாம் 863 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் 759 புள்ளிகளை பெற்றுள்ளார்.

விராட் கோலி 715 புள்ளிகள் பெற்று 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ரோகித் சர்மா 707 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.