மதிப்புமிக்க 6 இந்திய நாணயங்கள் படத்தைப் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரியின் ட்வீட், இணையத்தில் வைரலாகி வருகிறது.
காலப்போக்கில் நாம் பரிணாம வளர்ச்சியடையும் போது, பல விஷயங்கள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக மாறுகின்றன. ஆனால் அவை பெரிதும் அரியப்படாமல் இருக்கின்றன. அவற்றில் இந்திய சந்தையில் புழக்கத்திலிருந்த இந்தியப் பைசா நாணயங்களும் அடங்கும். நீங்கள் 90 களில் அல்லது அதற்கு முன் பிறந்திருந்தால், இந்த நாணயங்களில் சிலவற்றை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அண்மை செய்திகள்: ஏ.ஆர்.ரகுமானை போல் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் – பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
இப்போது, ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் ட்விட்டரில் ஆறு இந்திய பைசாவின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதற்கு சில பயனர்கள் ஏக்கம் அடைந்து ’90களின் அழகான சகாப்தம் போய்விட்டது’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்தப் பதிவைப் பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, “இதில் எந்த நாணயத்தில் எதையாவது வாங்கினீர்கள்?” என கேட்டுள்ளார்.
https://twitter.com/AwanishSharan/status/1629323806090334209?s=20
அவரது இடுகையில் 5 பைசா, 25 பைசா மற்றும் 50 பைசா உட்பட 6 வெவ்வேறு இந்திய பைசாவைக் காட்டும் படம் உள்ளது. நீங்கள் 90களின் குழந்தையாக இருந்தால், கடைசியாக 50 பைசா நாணயத்துடன் தொடர்புடைய தலைமுறையினராக இருக்கலாம்.இந்த பதிவுக்குப் பல நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகின்றனர்.







