டெல்லியில் போராட்டம் நடத்தும் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நான் ஆதரவாக நிற்பேன் – கனிமொழி எம்.பி

மல்யுத்த வீரர்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை…

மல்யுத்த வீரர்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை பதிலளிக்குமாறும், மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாத வகையில், நீதித்துறை ஆவணங்களிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டெல்லியில் போராட்டம் நடத்தும் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நான் ஆதரவாக நிற்கிறேன். மல்யுத்த வீரர்களின் தைரியமான எதிர்ப்பு மற்றும் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, தற்போது பிரிஜ் ஷரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தின் குறுக்கீடு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.