“2024 தேர்தலில் போட்டியிட மாட்டேன்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!

2024 நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

2024 நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிட உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தது.அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.

இந்த தேர்தல் அடுத்த ஆண்டுகளில் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும் அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக 25 எம்.பி சீட்களில் ஜெயிக்கும், அதில் பலர் மத்திய அமைச்சர்கள் ஆவார்கள் எனவும் பேசி வந்தார்.இதில் கோவை தொகுதியும் ஒன்று. கோவையில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் இந்த முறை அங்கு அண்ணாமலை போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

 

இந்நிலையில் தான் தான் எம்.பி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இது பொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. ஒரு தொண்டனாக இருந்து பணியாற்றவே நான் நினைக்கிறேன். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே எனக்கு விருப்பம் அதற்காக உழைக்கிறேன்.  தமிழகத்தை விட்டு எனக்கு செல்ல விருப்பமில்லை. டெல்லி அரசியலுக்கு செல்ல விருப்பமுமில்லை. என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.