லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் ஒரு இறக்கும் காட்சியில் நடிக்க விரும்புவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
தமிழில், நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். பிரபல இந்தி இயக்குநரான இவர், ’பிளாக் பிரைடே’, ‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆப் வசிப்பூர்’, ’மன்மர்ஸியான்’ உள்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் திரையிடப்பட்டது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் விரைவில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இயக்குநர் அனுராக் காஷ்யப் அண்மையில் அளித்திருந்த பேட்டி ஒன்றில், ‘எனக்கு லோகேஷ் கனகராஜ் படத்தில் ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்பதையும் தாண்டி, அவர் யுனிவர்சில் புகழ் தரும் வகையில் இறக்கும் காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.







