லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன் – இயக்குனர் வெங்கட் பிரபு

லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு…

லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் பெரும்பான்மையான படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதிலும், சமீபத்தில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய மாநாடு படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நாகசைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  மேலும், வில்லனாக அரவிந்த் சாமி மற்றும் சரத்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கஸ்டடி படத்தின் பிரீ ரிலீஸ்
நிகழ்ச்சி சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, நாக சைதன்யா, சரத்குமார், கீர்த்தி செட்டி,
பிரியாமணி, பிரேம் ஜீ, ராம்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெங்கட் வெங்கட் பிரபு தெரிவித்ததாவது..

இது நாக சைதன்யாவை தமிழ்நாட்டுக்கு வரவேற்கும் நிகழ்ச்சி. நான் இயக்குனர் லிங்குசாமி படங்களின் காட்சிகளை நிறைய திருடியுள்ளேன். லிங்குசாமி இயக்கிய “ஜி”  படத்தை ஒன்றரை ஆண்டுகள் எடுத்தோம்.

அவரிடம்  இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எனது மானசீக குரு லிங்குசாமிதான் . இது எனது முழுநீள தெலுங்கு படம். நடிகர் நாக சைதன்யா பந்தா காட்டாதவர்.
நாயட்டு மலையாள படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இப்படத்தை எடுத்தேன்.
ரசிகர்களுக்காக சில கமர்ஷியல் காட்சிகளை  கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன்.” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நாக சைதன்யா தெரிவித்ததாவது..

” தமிழில் இத்தனை வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். வெங்கட் பிரபு நிச்சயம்
வெற்றிபெறுவார். படம் நன்றாக வந்துள்ளது. தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. என் கனவு நிறைவேறியுள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து தமிழில்
வெங்கட் பிரபு என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். என்னைவிட தமிழ் சினிமாவில் கீர்த்தி ஷெட்டி சீனியர் நான் ஜூனியர்தான்.” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.