விஜய்யின் லியோ மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் – நடிகர் ரஜினிகாந்த்!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.  மாஸ்டர் படத்தை தொடர்ந்து…

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.  மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆனால் தனது சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய லோகேஷ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்தப் படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில்,  படத்தின் டிக்கெட் விற்பனை சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது.  இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன்களிலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,  அனிருத் உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்,  தலைவர் 170-படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,  புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்குப் பிறகுத் தென் மாவட்டத்தில் படப்பிடிப்பிற்காக 1977-ம் ஆண்டு வந்தேன்.  இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள்.  எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை.   விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்  என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.