கேசினோவில் முதலீடு பண்ணலாம் என்று கூறி சகோதரனாக நினைத்த நண்பன் ஏமாற்றிவிட்டான் என்று பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். போதைப் பொருள் வழக்கில் கைதான இவர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், தனது நண்பர் ராகுல் டோன்ஸ் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராகுலை எனது சகோதரர் போலவே நினைத்தேன். அவர் பெற்றோரும் எனக்கு நல்ல பழக்கம். அவர்களும் பிசினசில் பண முதலீடு செய்ய கூறினார்கள். கோவா, கொழும்பு, மலேசியா உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கேசினோக்களில் முதலீடு செய்யுமாறு ராகுல் என்னை ஊக்குவித்தார்.
அந்த கேசினோக்களின் மேனேஜராக தான் இருப்பதாகவும் கூறினார். அதில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் வரும் என்றும் கூறினார்.
அவரை நம்பி, அவர் பெற்றோரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ. 45 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். இது தொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பு போலீசிடம் புகார் செய்தேன். அவர்கள் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினார்கள். நீதிமன்றத்திற்கு சென்றபோது போலீஸ் ஸ்டேஷனில் மோசடி புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். இவ்வாறு நடிகை சஞ்சனா தெரிவித்துள்ளார்.








