முக்கியச் செய்திகள்இந்தியா

“தீ விபத்தில் குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

தீ விபத்தில் குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.  இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் இந்த விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த 23 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில்,  குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு வரப்பட்டது.  இந்நிலையில்,  7 தமிழர்களின் உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சின் சென்றார்.  இதே போல கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயனும் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.  இதையடுத்து, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

“குவைத் தீ விபத்து நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இன்று இங்கு கேரளாவை சேர்ந்த 23 உடல்கள்,  தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உடல்,  கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் உடல் கொண்டு வரப்பட்டன.  கேரளாவை பொறுத்தவரை 23 பேரையும் இழந்து நிற்கும் உறவினர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : அதிகாரி மீது கோப்பையை வீசிய மேயர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தீ விபத்து நிகழ்ந்த நேரத்தில் இருந்து குவைத் அரசு எடுத்த தொடர் முயற்சிகள் அளப்பாரியது.  இது போன்று இந்திய அரசும் சரியான முறையை கையாண்டு வெளியுறவு துறை இணை அமைச்சரை நேரடியாக அங்கு அனுப்பி வைத்தனர்.  இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறமல் இருக்க முன் எச்சரிக்கையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,  குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

மேலும் இந்த குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்கவும் குவைத் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்திய அரசு தொடர்ந்து குவைத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கேரள அரசும் உடனே ஆலோசனை மேற்கொண்டு எங்கள் சார்பில் அமைச்சர் வீணா ஜார்ஜ் அனுப்ப முயன்றோம்.  ஆனால் அவர் இதே விமான நிலையம் வந்த பிறகு மத்திய அரசு political clearance கொடுக்கவில்லை.  அதை இந்த இடத்தில் சர்ச்சை செய்ய வில்லை. அதற்கான இடமும் இது இல்லை”

இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ரேபரேலி தொகுதி பரப்புரை – திருமணம் எப்போது என்று கேட்ட தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்!

Web Editor

உலக கோப்பை கால்பந்து போட்டி; இன்று 2 லீக் போட்டிகள்

G SaravanaKumar

சேலத்தின் முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளிக்க தயார் – தகவல்

Dinesh A

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading