’வலிமை’ நாயகியின் வெப்தொடர்.. 28 ஆம் தேதி ரிலீஸ்!

அஜித்தின் ’வலிமை’ பட நாயகி நடித்துள்ள வெப் தொடர், வரும் 28 ஆம் தேதி சோனி லைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஸி. இவர் தமிழில் ரஜினியின் ’காலா’…

அஜித்தின் ’வலிமை’ பட நாயகி நடித்துள்ள வெப் தொடர், வரும் 28 ஆம் தேதி சோனி லைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஸி. இவர் தமிழில் ரஜினியின் ’காலா’ படத்தில் நடித்திருந்தார். இப்போது அஜீத் ஜோடியாக ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடித்துவரும் அவர், ’மகாராணி’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். கரண் ஷர்மா இயக்கியுள்ள இந்தத் தொடரில் சோஹும் ஷா, அமித் சியால், வினீத் குமார் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பீகாரில் 1980- ஆம் வருடத்தில் நடப்பது போல, அரசியல் பின்னணியில் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியறிவற்ற பெண்ணாக ஹூமா குரேஸி நடித்துள்ளார். இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை அவர் இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் படம் வரும் 28 ஆம் தேதி SonyLIV -வில் வெளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.