வீரன் திரைப்படம் எப்படி இருக்கு? -விமர்சனம் இதோ!…

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் வெளியாகி உள்ளது வீரன் திரைப்படம். இப்படத்தை ‘மரகத நாணயம்’ மூலம் புகழ் பெற்ற இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி,வினய், ஆதிரா ராஜ், முனீஸ்…

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் வெளியாகி உள்ளது வீரன் திரைப்படம். இப்படத்தை ‘மரகத நாணயம்’ மூலம் புகழ் பெற்ற இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி,வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சரி இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

படத்தின் கதை:

வீரனூரில் வாழ்ந்து வரும் ஹிப் ஹாப் ஆதிக்கு, தனது சிறு வயதில் மின்னல் தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார். உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.
சில நாட்கள் கழித்து ஆதிக்கு நினைவு திரும்புகிறது. அப்போது தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.

அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். இதற்கிடையில் வில்லன் வினய் தனது ரூ. 2000 கோடி மதிப்புள்ள மிகவும் ஆபத்தான திட்டத்தை வீரனூரில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இந்த திட்டத்தினால் ஏராளமான மக்கள் உயிர் பலியாகும் என ஆதிக்கு தெரியவருகிறது. இதன்பின் ஆதி என்ன செய்தார்? வில்லன் வினய்யை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

சூப்பர் ஹீரோ ஆதி:

Multi Universe படங்களான மார்வ்வெல் திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுத்துவிடும். அந்த அளவிற்கு சூப்பர் ஹீரோ concept சுண்டி இழுக்கும். அதுபோன்ற concept-ல் உருவாகி உள்ளது வீரன். ஸ்பைடர் மேன் போல் மின்னல் தாக்கியதால் மின்னல் வீரனாகும் ஆதி ஊரின் நன்மைக்காக எடுக்கும் சூப்பர் ஹீரோ அவதாரம் தான் படம். மலையாளத்தில் வந்த மின்னல் முரளிக்கும் மின்னல் தாக்குவது மட்டுமே ஒற்றுமை. மற்றபடி அப்படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சூப்பர் ஹீரோ ஆதியின் வாகனம் குதிரை. இதை பார்க்கும் பொழுது 90’s-ல் வெளிவந்த விடாது கருப்பு போன்று இருந்தது. சூப்பர் ஹீரோ getup ஆதிக்கு பக்கவா சூட் ஆகுது. coustume designer-க்கு பாராட்டுகள்.

காமெடி, இசை, காதல்:

முனீஷ்கந்த் மற்றும் காளி வெங்கட்-ன் காமெடி காம்போ workout ஆகல. வீரன் படத்திற்கு ஆதி தான் இசை அமைத்திருக்கிறார். படத்தில் bgm மட்டுமே நன்றாக இருந்தது. மற்றபடி பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. படத்தில் வரும் திருவிழா பாடலில் vibe மிஸ்ஸிங். இன்னும் bettera பண்ணிருக்கலாம். வினைக்கு ஸ்கோப் இல்லை.

காதல் சீன பொறுத்தவரை நட்பிலிருந்து காதல் மலர்கிறது. காதலும் நட்பும் படத்தில் இடம்பெற்றிருக்கும் இசை போல தான் பெருசா மனசுல உக்காரல.
படத்தில் unwanted காட்சிகள் நிறைய உள்ளது. எந்த சீனிலும் சுவாரஸ்யம் இல்லை. ஃபேண்டஸி படமாக இருந்தாலும் அதற்கான நியாயத்தைத் திரைக்கதையில் செய்ய மறந்துவிட்டார் இயக்குநர். மொத்தத்தில் வீரன்… விஷயமற்றவன்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.