31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தொழில்நுட்பம்

பேஸ்புக் அக்கவுண்டை, எப்படி அதிகாரப்பூர்வ பேஸ்புக் அக்கவுண்டாக மாற்றுவது?


மு.சி. அறிவழகன்.

பேஸ்புக் பயன்படுத்தும் பலருக்கும், தன்னுடைய அக்கவுண்டும் அதிகாரப்பூர்வ அக்கவுண்டாக மாறாதா என்ற ஏக்கமும், ஆசையும் இருக்கும். உங்கள் பேஸ்புக் அக்கவுண்டை எப்படி அதிகாரப்பூர்வ அக்கவுண்டாக மாற்றுவது? என்ற சந்தேகம் இருந்தால், இந்த செய்தியை முழுமையாகப் படியுங்கள் உங்கள் சந்தேகம் குறையலாம்.
அதிகாரப்பூர்வ அக்கவுண்டாக பேஸ்புக்கைப் பயன்படுத்த முதலில் உங்களுக்கு என்று ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் இருக்க வேண்டும் அல்லது பேஸ்புக் பேஜ் இருக்க வேண்டும்.
verified badge என்று இணையத்தில், தேடினால் நமக்கு Verify your profile or Page என நமக்கு ஒரு இணைப்பு கிடைக்கும், அதில் (fill in this form) ஒரு படிவம் தோன்றும், அதில் கேட்கப்படுள்ள தகவல்கல்ளை நாம் கொடுக்க வேண்டும்.
1. உங்களுக்கு பேஸ்புக் அக்கவுண்ட் Verify செய்ய வேண்டுமா அல்லது பேஸ்புக் பேஜ் Verify செய்ய வேண்டுமா என்று கேட்கப்பட்டு இருக்கும். அதில் நமக்கு தேவையானதை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதவது, பேஸ்புக் அக்கவுண்ட் என்றால் அந்த இணைப்பை அங்கு பதிவிட வேண்டும். பேஸ்புக் பேஜ் என்றால் அந்த இணைப்பை அங்கே பதிவிட வேண்டும்.
2.  நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், சான்றை சமர்பிக்க வேண்டும். அதில் Driving Licence, Passport, National ID Card, Tax Filing,Rrecent utility Bill, Articles of incorporation ஆகியவை இருக்கும் அதில் நாம் எதை சமர்பிக்க விரும்புகிறோமோ அதனை நாம் தேர்வு செய்து, அங்கு அதனைப் பதிவேற்ற வேண்டும்.
3.  பதிவு செய்யும் நபர் எந்த பிரிவில் வருகிறார் என்பதனை பதிவிட வேண்டும். அதில், News / Media, Sports, Government and Politics, Music, Fashion, Entertainment, Digital Creator / Blogger / Influencer, Gamer, Business / Brand / Organisation, Other என இருக்கும்.
4.  அடுத்து நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் அல்லது எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
5.  அதனைத் தொடர்ந்து உங்களைப் பற்றி, பிரபல இணையதளங்களில் வெளியான இணைப்புகளைப் பதிவிட வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கும், அது கட்டாயம் இல்லை என்றாலும் அதனை நாம் அங்குப் பதிவிடுவது நம்முடைய கணக்கை Verify செய்ய உதவும்.
இறுதியாக அங்கு கொடுக்கப்பட்டுள்ள SEND – ஐ அழுத்தினால் முடிந்துவிடும், அதன்பிறகு verified badge – டீம் நம் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யும். அவர்களின் விதிகளுக்கு உட்பட்டு நம் விண்ணப்பம் இருந்தால் நம்முடைய பேஸ்புக் அக்கவுண்ட் Verify செய்யப்படும். இல்லையென்றால் Verify செய்ய உங்கள் பக்கம் இன்னும் தகுதி பெறவில்லை எனத் தெரிவிக்கப்படும். அதனால், இதற்கு முன் நாம்முடைய பேஸ்புக் அக்கவுண்ட் எவ்வளவு பேரால் பின்தொடரப்படுகிறது என்பதனை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் 10,000 லைக்குகளையும்,  10,000 பின்தொடர்பவர்களையும் பெற்றிருந்து, சமீபத்தில் 3 செய்தியையாவது பிரபல இணையதள பக்கங்களில் வந்திருக்கிறதா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நம் அக்கவுண்டை, அதிகாரப்பூர்வ அக்கவுண்டாக மாற்ற உதவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading