ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை!

இந்த ஆண்டு ஜூலை மாதம், கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை நிலவிய மாதம் என்று சா்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது…

இந்த ஆண்டு ஜூலை மாதம், கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை நிலவிய மாதம் என்று சா்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு கூட தாமதமாக தொடங்கியது. கடுமையான வெப்பத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டின் ஜூன் மாதம் நிலவிய வெப்பநிலையானது கடந்த 174 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை நிலவிய மாதம் என தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இது குறித்து என்ஓஏஏ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”கடந்த ஜூன் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 20-ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 33.9 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் கடந்த 174 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ள மாதமாகும்.

தற்போதுள்ள சூழலில், இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட முதல் 10 இடங்களை பிடித்த ஆண்டுகளின் பட்டியலில் 2023-ம் ஆண்டு இடம் பெறுவதற்கு 99% வாய்ப்புகள் உள்ளன. அதேபோல அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட முதல் 5 ஆண்டுகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கு 97% வாய்ப்புகள் உள்ளன” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.