ஹோண்டா எலிவேட் SUV கார் இன்று இந்தியாவில் அறிமுகம்! இதுல இவ்ளோ வசதிகளா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹோண்டா எலிவேட் SUV கார் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் SUV கார்களின் விற்பனை எனபது மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே புதிதாக…

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹோண்டா எலிவேட் SUV கார் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் SUV கார்களின் விற்பனை எனபது மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே புதிதாக வெளியாகும் பல கார்கள் SUV செக்மென்ட் கார்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பல இந்தியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹோண்டா எலிவேட் SUV கார் இன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற பிரபலமான மாடல்களுக்குப் போட்டியாக தான் இந்த புதிய எலிவேட் கார் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும், ஹோண்டா நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனை செய்து வரும் ஹோண்டா
HRV மற்றும் CRV ஆகிய கார்களில் இருந்து டிசைன் மற்றும் ஸ்டைல் அம்சங்கள் எடுக்கப்பட்டு இந்த காரை ஹோண்டா உருவாக்கியுள்ளதால் மற்ற கார்களை விட கூடுதல் கவனம் பெற்றுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்
மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, இதில் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 27-28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம் என்பதுதான் கூடுதல் சிறப்பு.

இது தவிர, இந்த கார் 4.2-4.3 மீட்டர் நீளம் கொண்டதாக இருப்பதோடு, இதன் முன்பக்கம் பின்பக்கம் LED லைட், DRLS வசதிகள், சிங்கள் பேன் சன் ரூப், மல்டி ஸ்போக் அலாய் வீல், சதுர வடிவ வீல் ஆர்ச், பிளாட் டிசைன் கொண்டிருக்கும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், சிவிடி மற்றும் இ-சிவிடி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்ககளும் இதில் இருக்கலாம். டெக்னாலஜி வசதிகளை பொறுத்தவரை,
இதில் ஒரு மிகப்பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வசதி, கனெக்டிவிட்டி வசதிகள், வயர்லெஸ் போன் சார்ஜ்ர், சிங்கள் பேன் சன் ரூப் போன்ற வசதிகள் இருக்கும்.

கிட்டத்தட்ட ரூ 10.50 லட்சம் முதல் ரூ 20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இதன் விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அறிமுக நாளான இன்று இந்த கார் குறித்த முழு அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானாலும் ஏதேனும் பண்டிகை காலத்தின்போது தான் ஹோண்டா எலவேட் SUV கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.