ஷரத் யாதவ் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனாதா தள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில்…

மறைந்த மத்திய அமைச்சர் ஷரத் யாதவ் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய ஜனாதா தள கட்சித் தலைவருமான ஷரத் யாதவ் தனது 75வது வயதில் நேற்று இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி ஷரத் யாதவ் ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஷரத் யாதவ் உடல்நிலை குறைபாடு காரணமாக குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஷரத் யாதவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஷரத் யாதவின் மறைவு நாட்டிற்கும், அரசியலுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவர் தனது வாழ்நாள் முழுவதும், பிற்படுத்தப்பட்ட மற்றும் எளிய மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக போராடினார். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்த இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் வழங்கட்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும், டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஷரத் யாதவ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.