“ஹிட்லர் திரைப்படத்தில் கருத்து எதுவும் இல்லை.. ஜாலியான ஆக்‌ஷன் படம்..” – #VijayAntony கருத்து!

ஹிட்லர் திரைப்படத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், அனைவருக்கும் பிடிக்கும் விதமாக ஜாலியான, ஆக்சன் படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் நாயகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா…

“Hitler movie has no comment.. Fun action movie..” - #VijayAntony comment!

ஹிட்லர் திரைப்படத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், அனைவருக்கும் பிடிக்கும் விதமாக ஜாலியான, ஆக்சன் படமாக இருக்கும் எனவும் அப்படத்தின் நாயகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ஹிட்லர். இப்படம் வரும் செப். 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த விழா மேடையில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி,

“இயக்குநர் கௌதமுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முன்பு அவர் படத்தில், இசையமைக்க வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. தனா மிகச்சிறந்த இயக்குநர் படத்தை மிக அற்புதமாக எடுத்துள்ளார். ரியா உங்களின் மன்மத லீலை பார்த்தேன். அந்தளவு இல்லை என்றாலும் இதில் ரொமான்ஸ் இருக்கிறது. வந்த சில படங்களில், நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.

விவேக் மெர்வின் ரசிகன் நான். உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், விவேக் பிரசன்னா எல்லாம் நன்றாக நடித்துள்ளார்கள். ராஜா பல தடைகளைக் கடந்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நாங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை. எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரியான ஜாலியான, ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.