சராசரி மனிதனின் சாட்சியத்திற்கு சமமானது மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம்: சென்னை உயர்நீதிமன்றம்

சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை மாற்று திறனாளி…

சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை மாற்று திறனாளி பெண், வில்லிவாக்கத்தில் உள்ள இசை வகுப்புக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழங்கிய சாட்சியம் தொடர்பாக நீதிபதி கூறுகையில் பார்வை மாற்று திறனாளி என்றாலும், உலகில் நடப்பவைகளை ஒலியினால் பார்த்து, அருகில் இருப்பவர்களை அவர்களது குரலின் சத்தத்தினால் அடையாளம் கண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தை புறம் தள்ளமுடியாது என்று தெரிவித்தார். சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது என்று நீதிபதி வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.