சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்துக்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் H3N2 வைரஸ் பரவி பருவகால காய்ச்சல் சளி , இருமல் தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது. இந்த பருவகால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் வரை இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வரை தொடரலாம். த்இருமல் 3 வாரங்களுக்கு கூட தொடரலாம். நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் தகவலின் படி, இந்த வழக்குகளில் பெரும்பாலானவை H3N2 இன்ஃபுளூயன்ஸா வைரஸ் ஆகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தில் இந்த இருமல் மற்றும் சளி ஏற்படக்கூடியதே. இது பெரும்பாலும் 50 வயது அதிகமானவர்களுக்கும் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. இது காய்ச்சலையும் அதன்பிறகு மூச்சுக் குழாயில் தொற்றையும் ஏற்படுத்துகிறது. காசு மாசுபாடு இதற்கு மிக முக்கிய காரணம்.
எனவே பருவகால சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை தரக்கூடாது. எனவே நோயாளிகள் Azithromycin and Amoxiclav இந்த பருவ கால வைரஸ் காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ள தேவையில்லை. பல ஆண்டிபயாட்டிக்குகள் நோயாளிகளிடம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
அண்மைச் செய்தி : தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி – உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
அதுமட்டுமல்லாமல் 70 சதவீத டயரியா பாதிப்புகள் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. ஆனால் அவர்களுக்கு amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகளை தவறாக பரிந்துரை செய்கிறார்கள். எனவே மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடித்து நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கை, கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.