இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க திட்டமிட்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்தீப்பார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல் தரப்பில் 1300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனிடயே, போரினால் பாதிக்கப்பட்டு பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெற்று வந்த காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனை தாக்குதல் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேலுடன் இருமுனை போரை தொடங்க திட்டமிட்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்தீப்பார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். தெற்கு லெனானில் உள்ள இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பு மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கி நிலையில் இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







