“ஞாபகம் வருகிறதா? இவன் தீயென்று தெரிகிறதா” -யூடியூபில் 10 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்த ‘ஹே ராம்’…!

‘ஹே ராம்’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் யூடியூபில் 10 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.  கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமா மாலினி,…

‘ஹே ராம்’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் யூடியூபில் 10 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 

கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஹே ராம்’. ஷாருக்கான், ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, ஓம் பூரி, விக்ரம் கோகலே, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

மகாத்மா காந்தியை, கோட்சே கொன்றது குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சுதந்திர தினத்தையொட்டி இப்படம் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இப்படம் வெளியான 12 நாட்களில் யூடியூபில் 10 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.