ஆவினில் மூலிகை பால் – அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆவினில் அஸ்வகந்தா, மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால்களை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான பல்வேறு…

ஆவினில் அஸ்வகந்தா, மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால்களை புதிதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம், ஆவின் இல்லத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

ஆவினில் தினசரி 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகு பால் போன்ற மூலிகை பால் வகைகளையும், சுக்கு மல்லி காபி போன்ற பொருள்களையும் புதிதாக அறிமுகம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு போல் இல்லாமல் நிகழாண்டில் பண்டிகை நாள்களில் மக்களுக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் தடையின்றி விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.