கேரளாவில் ஜூன் 25 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

கேரளாவில் வரும் 25ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன்காரணமாக தமிழ்நாட்டில் வரும் 23, 24,…

கேரளாவில் வரும் 25ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன்காரணமாக தமிழ்நாட்டில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துளளது.   அதன்படி,  வரும் 25ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் வரும் 25ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,  “22.06.2024:  கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிகோடு, வயநாடு, கண்ணூர்,  காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகல் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

23.06.2024:  கோழிகோடு, வயநாடு,  கண்ணூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர்,  பாலக்காடு, மலப்புரம்,  காசர்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் வரும் ஜுன் 25 வரை மழை தொடரும்.  இந்த நாட்களில் கேரள கடல் பகுதியில் அலை ஆக்ரோஷமாக எழும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.