தென் மாவட்டங்களை மிரட்டும் கனமழை | பால் பொருட்களை அனுப்பி வைத்த ஆவின் நிர்வாகம்!…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கை  ஆவின் நிர்வாகம் தென் மாவட்டங்களுக்கு ட்ஏவையான பால் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கை  ஆவின் நிர்வாகம் தென் மாவட்டங்களுக்கு ட்ஏவையான பால் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேலும் தூத்துக்குடியின் பிரதான சாலைகளான தமிழ் சாலை ரோடு, வஉசி சாலை, கடற்கரை சாலை, லூர்தம்மாள் புரம், இந்திரா நகர், பால்பாண்டி நகர், புஷ்பா நகர், நிகிலேஷ் நகர் ,இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது சில வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்லும் நிலையில் மருத்துவமனையின் நுழைவாயிலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது தான் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர் ஆனால் இரவு முதல் பெய்த மழையால் தூத்துக்குடியில், 5,000 நாட்டு படகுகள், 250 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மேலும், தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்திற்கு வரும் சென்னை-தூத்துக்குடி விமானம், பெங்களுரில் இருந்து தூத்துக்குடி வர கூடிய விமானம் மதுரையில் தரை இறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை சென்னையில் இருந்து தூத்துக்குடி வர கூடிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,  முன்னெச்சரிக்கை  ஆவின் நிர்வாகம் தென் மாவட்டங்களுக்கு ட்ஏவையான பால் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
திருநெல்வேலி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலத்தில் இருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் ஆகியவற்றை ஆவின் நிர்வாகம் அனுப்பியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.