ரீ-யூனியனில் தலைமை ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கிய முன்னாள் மாணவர்கள் – #ViralVideo

முன்னால் மாணவர்கள் சந்திப்பில் முன்னாள் தலைமை ஆசிரியரிடம் முன்னாள் மாணவர்கள் பிரம்பால் அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நினைவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில், ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு ஒன்று, தங்கள்…

முன்னால் மாணவர்கள் சந்திப்பில் முன்னாள் தலைமை ஆசிரியரிடம் முன்னாள் மாணவர்கள் பிரம்பால் அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நினைவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில், ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் குழு ஒன்று, தங்கள் ரீ-யூனியன் நிகழ்வை தனித்தன்மையுடன் கொண்டாடடினர். அவர்கள் அனைவரும் அவர்களது முன்னாள் தலைமை ஆசிரியரிடம் தடியால் அடிக்கப்படுவதைக் காண முடிந்தது. X இல், கிருஷ்ணா என்ற பயனர் ஒரு சிறிய கிளிப்பைப் பகிர்ந்துள்ளார், அதில் பள்ளி ரீ-யூனியன் வேடிக்கையான முறையில் பதிவு செய்யப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என அனைவரும், வெள்ளை சட்டை மற்றும் பேன்ட் அணிந்து, ஒவ்வொருவராக தங்கள் தலமைமை ஆசிரியர் முன் ஆஜரானார்கள். இதன் பின்னர் தலமைமை அனைத்து மாணவர்களையும் தடியால் அடித்தார்.
இது அவர்களின் அற்புதமான பள்ளி வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தியது.
வீடியோ  366,000 முறைக்கும் மேல் பார்க்கப்பட்டது.  மேலும் 4,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது. கருத்துப் பகுதியில் இதற்கு கலவையான எதிர்வினைகள் இருந்தன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.