ஆஸ்கர் விருது பெற்ற பெண் இயக்குநரின் உடைமைகளை சுமந்து வந்தேன்: இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சி!

தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் இயக்குநர் கார்த்திகி உடன் விமானத்தில் வந்த பயணத்தை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் பார்த்திபன். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்ற யானைகள் முகாம்…

தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் இயக்குநர் கார்த்திகி உடன் விமானத்தில் வந்த பயணத்தை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி
பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு
குட்டி யானைகள் உட்பட  28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகி கொன்சால்வஸ் என்ற பெண் பொம்மன், அவரது மனைவி பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகள் இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் படம் தயாரித்து அப்படத்திற்கு தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என பெயரிட்டு நெட்ஃபிலிக்ஸ்  தளத்தின் மூலம் வெளியிட்டனர்.

இந்த படம் சிறந்த ஆவணகுறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. கடந்த 13ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 9வது ஆஸ்கர் விருது விழாவில் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றம் அப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, சென்னைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் இயக்குநர் கார்த்திகி விமானத்தில் வந்துள்ளார். அப்போது அந்த விமானத்தில் வந்த  இயக்குநர் பார்த்திபன் அவரை சந்தித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

’Oscars வென்ற பெருமைமிகு மங்கையுடன் ஒரே விமானத்தில் சென்னை வந்தேன். அவர் வருகைக்காக விமானம் நாற்பது நிமிடங்கள் காத்திருந்தது. யார் போட்டோ கேட்டாலும் மறுக்காமல் / மறக்காமல் அந்த தங்க மங்கை போஸ் கொடுத்தார் மகிழ்ச்சி தாளாமல். சென்னை வந்ததும் அந்தத் தங்கையின் உடைமைகளைச் சற்று தூரம் நான் சுமந்து உதவியதில் சற்றே நிறைவு. இன்னும் பெற்று மகிழத் தாய்மையுடன் வாழ்த்தினேன்’ என் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.