குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை அணிக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வந்த ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, கடந்த 2021ம் ஆண்டு குஜராத் அணிக்கு சென்றதோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அந்த அணி அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதோடு, இரண்டாவது ஆண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.







