அனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதனையடுத்து…

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதனையடுத்து அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பிறகு 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் வழிபாடுகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 36 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு, 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் சிறப்பு திரவிய அபிஷேகம் நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக, குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.